இந்தியா

80 வயதான முதியவர்..! சரியா நடக்க கூட முடியாதவரின் கால்களைக் கட்டிப் போட்டு சிகிச்சை வழங்கிய மருத்துவமனை..! மருத்துவமனை மீது எழுந்தது புகார்..!

Summary:

Old man legs knocked and treated in hospital for payment

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சம்பவம் பெரும் வைரலாகிவருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் சாஜபூர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் 80 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 11 ஆயிரம் சிகிச்சைக்கான பணத்தை கட்ட தவறியதால் அவரின் கால்களை மருத்துவமனை நிர்வாகம் கட்டிபோட்டுள்ளதாக அந்த முதியவரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

image

ஆனால், எலக்ரோலைட் இம்பேலன்ஸ் என்ற வலிப்பு நோயினால் அந்த முதியவர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வலிப்பு வரும்போது அவருக்கு காயம் ஏற்பாடாமல் இருக்கவே அவரது கால்கள் கட்டப்பட்டுள்ளதாவும், மனிதாபிமான அடிப்படையில் அந்த முதியவருக்கான சிகிச்சை கட்டணத்தை மருத்துவமனை தள்ளுபடி செய்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதனிடையே அந்தத் முதியவரின் கால்கள் கட்டப்பட்டு சிகிச்சை வழங்கப்படும் புகைப்படம் வைரலான நிலையில், இந்த விவகாரம் மத்திய பிரதேச முதல்வர் வரை சென்றுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர், இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டுவருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


Advertisement