என்ன.. மாரியாத்தாளுக்கே ஊசியா! தடுப்பூசியிலிருந்து எஸ்கேப்பாக இந்த பாட்டி செய்த காரியத்தை பார்த்தீங்களா! பரபரப்பு வீடியோ!!old-lady-dance-for-escape-from-corono-vaccine

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் பரவத் துவங்கியது. இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா பரவிய நிலையில் 2020 மார்ச் முதல் நாடு முழுவதும் கொரோனோ பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் தற்போது வரை கொரோனோ முற்றிலும் ஒழியாமல் ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனோ தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டும்தான் உயிரிழப்பைத் தடுக்க முடியும் என சுகாதார நிறுவனங்கள் அறிவுறுத்தும் நிலையில் பல நாடுகளிலும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனாலும் பயந்து தற்போதும் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் பகுதியில்  சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர். அப்பொழுது தட்சிணாமூர்த்தி என்ற நகரில் வசித்து வரும் ஒரு வயதான தம்பதியின் வீட்டிற்கும் சென்றுள்ளனர். அங்கு முதியவர்கள் இருவர் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளமாட்டோம் என கூறியுள்ளனர். ஆனாலும் செவிலியர் தொடர்ந்து தடுப்பூசி போட்டுகொள்ள கூறியுள்ளனர்.

அப்பொழுது தொடர்ந்து வேண்டாம் என மறுத்த பாட்டி, சாமியாடி 'மாரியம்மா, அங்காளம்மா ஆகாதுன்னு சொல்றேன் எனக்கே ஊசி போட வரியா? என கத்தியுள்ளார்.  மேலும் செவிலியர் அங்கிருந்து ஓடும் வரை அவர் சாமி ஆடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது.