பள்ளி மாணவன் போட்ட ஓரே ஒரு ட்விட்.! பேருந்து நேரத்தையே மாற்றிய ஒடிசா போக்குவரத்துத்துறை.!

பள்ளி மாணவன் போட்ட ஓரே ஒரு ட்விட்.! பேருந்து நேரத்தையே மாற்றிய ஒடிசா போக்குவரத்துத்துறை.!


Odisha school student Request to Change Bus time

ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் பகுதியைச் சார்ந்த சாய் அன்வேஸ் என்ற மாணவன் தினமும் மாநகர பேருந்தில் பள்ளிக்குச் சென்றுவந்துள்ளான். சாய் அன்வேஸ் தினமும் செல்லும் பேருந்து காலையில் 7.40 மணிக்கு வருவதால் பள்ளிக்கு தினமும் கால தாமதமாக செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வேதனையடைந்த மாணவன் சாய் அன்வேஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் தான் MBSபள்ளியில் படித்து வருவதாகவும், தினமும் அரசு பேருந்தில் தான் பள்ளிக்குச் சென்று வருவதாகவும், சமீபகாலமாக அரசு பஸ்சின் நேரம் மாற்றப்பட்டிருப்பதாகவும், தான் பள்ளிக்குக் காலை 7.30 மணிக்குச் செல்ல வேண்டும் ஆனால் தான் பள்ளிக்குச் செல்லும் அரசு பேருந்து காலை 7.40 மணிக்குத் தான் புறப்படுகிறது. 

இதனால் தான் பள்ளிக்கு தாமதமாகவே செல்ல முடிகிறது. எனவே மாவட்ட நிர்வாகத்திற்கும், போக்குவரத்து துறைக்கும் பள்ளிக்கு செல்ல நேரமாவதால், பேருந்தின் நேரத்தை எனக்காகவும், எனது படிப்பிற்காகவும் மாற்றியமைத்து தர வேண்டும் என கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

இதனைக் கண்ட புவனேஷ்வர் மண்டல நகர போக்குவரத்து நிர்வாக இயக்குநர் இனி காலை 7 மணிக்கு பேருந்து புறப்படும். நீங்கள் பள்ளிக்குத் தாமதமாக செல்ல மாட்டீர்கள் என பதிலளித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த தகவலை அதிகாரிகள் வெளியிட்டதும், மாவட்ட நிர்வாகத்திற்கும் போக்குவரத்துத் துறைக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.