இந்தியா சினிமா

திரையுலகமே அதிர்ச்சி.. நடிகையின் கை-கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம்.. ஷூட்டிங் பெயரில் பயங்கரம்.! 

Summary:

திரையுலகமே அதிர்ச்சி.. நடிகையின் கை-கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம்.. ஷூட்டிங் பெயரில் பயங்கரம்.! 

குறும்பட (Short Film) படப்பிடிப்பில், நடிகையை கை-கால் கட்டிப்போட்டு பலாத்காரம் செய்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் புறநகர் பகுதியில் பரத்பூர் என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் குறும்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அப்போது, குறும்படத்தில் நடித்த நடிகையின் கை-கால்களை கட்டிப்போட்டு, குறும்பட நாயகன் சூரஸ், உதவியாளர் பிஷ்ணு உட்பட 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக நடிகை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரிகள் தெரிவிக்கையில், "மறைந்த மடல் அழகி சௌமியா ரஞ்சன் பாணிக்ராஹியின் தற்கொலையை வைத்து குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

குறும்படத்தில் நடிக்க இளம் நடிகை ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு பரத்பூரில் வைத்து நடைபெற்றுள்ளது. அப்போதுதான், குறும்பட நாயகன் உட்பட 3 பேர் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. 


Advertisement