ஆட்டோவை முந்த முயன்று தலைகுப்புற கவிழ்ந்த தனியார் பேருந்து... கோரவிபத்தில் பறிபோன செவிலியரின் உயிர்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!nurse dead in private bus accident kerala

ஆட்டோவை முந்த முயன்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து தலசேரி வழியாக தனியார் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்றுள்ளது. அப்போது குற்றிக்கோல் என்ற பகுதியில் ஆட்டோவை, தனியார் பேருந்து முந்த முயன்ற நிலையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராதவிதமாக சாலையில் கவழ்ந்து விபத்துள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த செவிலியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களுடன் மீதமிருந்த பயணிகளை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததை தொடர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KERALA

பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் செவிலியர் கண்ணூரை சேர்ந்த ஜோபியா ஜோசப் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பேருந்தை அதிவேகத்தில் ஓட்டுநர் இயக்கியதால் தான் விபத்து ஏற்பட்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.