
பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருப்பது அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. நாடு முழுவதும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய பீகாா் சட்டப் பேரவைத் தோதலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
அங்கு நடந்த தேர்தலில் 4 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்கு அளித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர். பிகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை காலை எண்ணப்பட்டன. இதில், 7 லட்சத்து 6 ஆயிரத்து 252 வாக்குகள் அதாவது 1.69 சதவீதம் பேர் நோட்டாவுக்கு தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர்.
பல தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசத்தை விட நோட்டா வுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தங்களது தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாமல் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர்.
Advertisement
Advertisement