இனி வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை தேவை இல்லை.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட SBI..!

No minimum amount is required for SBI accounts


no-minimum-amount-is-required-for-sbi-accounts

SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.

பொதுவாக அரசு வங்கிகள் முதல் தனியார் வங்கிகள் வரை அந்தந்த வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்கவேண்டியது அவசியம் என்ற முறை பின்பற்றப்பட்டு வருகிறது. பாரத ஸ்டேட் வங்கியை பொறுத்தவரை ஊரகப்பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் ரூ. 1000 மும், நகர்ப்பகுதியில் இருக்கும் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ. 2000 மும் வைத்திருக்க வேண்டும்.

அதேபோல், பெருநகர பகுதிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வாங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ. 3000 வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்து வந்தது.

இந்நிலையில் எந்த ஒரு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க தேவை இல்லை எனவும், வங்கி கணக்கில் பூஜ்யம் என்ற நிலையில் கூட கணக்கை தொடர முடியும் எனவும் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார்.