இந்தியா

நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் நாளை தூக்கிலிடுவதில் சிக்கல்!

Summary:

Nirbhaya case punishment case

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போய் இருக்கிறது. 

இந்தநிலையில், பவன் குமார் குப்தா இன்று ஜனாதிபதி முன் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது கருணை மனுவை  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  நிராகரித்துள்ளார். மற்ற மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், கருணை மனு  நிராகரித்து 14 நாட்களுக்குள் அதன் விவரம் குற்றவாளிக்கு  தெரிவிக்கப்படவேண்டும்.  இதனால் குற்றவாளி பவன் குமார் குப்தாவுக்கு 14 நாட்கள் அவகாசம் கிடைத்து உள்ளது. இதனால் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவது தள்ளிவைக்கபட்டுள்ளது. 


Advertisement