நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு தண்டனை? நீதிமன்றம் அதிரடி!

நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு தண்டனை? நீதிமன்றம் அதிரடி!


Nirbhaya case punishment

நிர்பயா வழக்கில் நாளை காலை 6 மணிக்கு முன்பு கூறியபடி நான்கு குற்றவாளிகளும் தூக்கிலிடப்படுவார்கள் என்று டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.

nirbaya

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பவன் குமார் குப்தாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன்மூலம், நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நாளை காலை தூக்கிலிடப் படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.