இந்தியா

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி! குற்றவாளி முகேஷ் சிங்கின் சீராய்வு மனு தள்ளுபடி!

Summary:

Nirbhaya case punishment


கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

குற்றவாளிகள் தரப்பில் இருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் என்பவரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். 

இது தொடர்பாக நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் கருணை மனுவை நிராகரித்ததற்காக கூறப்பட்டிருக்கும் காரணங்கள் அனைத்தும் திருப்தி அளிப்பதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

இதன் மூலம் குற்றவாளிகளுக்கு  தூக்கு தண்டனை அளிக்கும் விவகாரத்தில் சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிந்து விட்டதால், குற்றவாளிகள் அனைவரும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிடப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 


Advertisement