மீண்டும் நிறுத்தப்பட்ட தூக்கு தண்டனை..! 4 பேருக்கும் நாளை தூக்கு இல்லை: டெல்லி நீதிமன்றம் உத்தரவு.!

மீண்டும் நிறுத்தப்பட்ட தூக்கு தண்டனை..! 4 பேருக்கும் நாளை தூக்கு இல்லை: டெல்லி நீதிமன்றம் உத்தரவு.!



nirbhaya-accused-hanging-stopped

கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கி கொலை செய்தப்பட்டார், இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வருக்கும் நாளை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இவர்களை தூக்கிலிட தேதி குறிப்பிடப்படும், வேறு வேறு காரணங்களில் இவர்களது தூக்கு தண்டனை தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இறுதியாக மார்ச் மூன்றாம் தேதி நால்வரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

Nirpaya murder

இந்நிலையில், தூக்கு தண்டனைக்கு தடைவிதிக்க வேண்டும் என குற்றவாளிகளில் ஒருவனான பவன் குப்தா டெல்லி நீதிமன்றல் மனு தாக்கல் செய்துள்ளான். இந்த மனுவை டெல்லி விசாரணை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதனிடையே நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை தூக்கு இல்லை எனவும், மறு தேதி நிர்ணயிக்கப்படும் வரை 4 பேரையும் தூக்கிலிடுவது நிறுத்தி வைக்கப்படுவதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.