
Nirbhaya accused hanging on march 20th
2012 ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதோடு, கடுமையாக தாக்கி கொலை செய்தப்பட்டார். இந்த வழக்கு சம்மந்தமாக முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இவர்களை தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இவர்களது தூக்கு தண்டனை தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இறுதியாக மார்ச் மூன்றாம் தேதி நால்வரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி குற்றவாளிகளில் ஒருவனான பவன் குப்தா குடியரசு தலைவருக்கு கருணை மனு அழைத்திருந்தான். இதனால், தூக்கு தண்டனை மீண்டும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளிகள் நால்வரையும் வரும் மார்ச் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதி மன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement