நிர்பயா வழக்கில் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட தூக்கு தண்டனை! கண்ணீருடன் குமுறும் நிர்பயா தாய்!

நிர்பயா வழக்கில் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட தூக்கு தண்டனை! கண்ணீருடன் குமுறும் நிர்பயா தாய்!



nirbaya mom crying for punishment postponed

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி (இன்று) தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நேரத்தில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த  மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி கீழமை நீதிமன்றம் குற்றவாளிகள் தூக்குத் தொடர்பாக அதிரடி உத்தரவு ஒன்றை நேற்று மாலை பிறபித்தது.

nirbaya

குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளதாக, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த தகவல் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால், மறு உத்தரவு வரும் வரை 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றவாளிகளுக்கு மீண்டும் தண்டனை தள்ளிப் போயிருக்கும் நிலையில், நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, தூக்கிலிட தடை என்ற உத்தரவை கேட்டு அழுதுள்ளார். மேலும், குற்றவாளிகளின் வழக்கறிஞர், குற்றவாளிகளுக்கு தூக்கு நிறைவேற்றப்படாது என்று என்னிடம் சவால் விடுகிறார். நான் தொடர்ந்து போராடுவேன் என குமுறலுடன் தெரிவித்தார்.