4 பேரையும் தூக்குல போடுற பணத்தை வைத்து எனது மகளின் திருமணத்தை நடத்த போகிறேன்! பவன் ஜலாத்!

4 பேரையும் தூக்குல போடுற பணத்தை வைத்து எனது மகளின் திருமணத்தை நடத்த போகிறேன்! பவன் ஜலாத்!


nirbaya case punisment


நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடும் பணத்தை  வைத்து எனது மகளின் திருமணத்தை நடத்த இருக்கிறேன் என தூக்கிலிட நியமிக்கப்பட்டுள்ள பவன் ஜலாத் கூறியுள்ளார்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த அக்சய் குமார்சிங், வினய்சர்மா, பவுன்குப்தா, முகேஷ்சிங் ஆகிய 4 பேரையும் வருகிற 22-ஆம் தேதி தூக்கில் போட டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

nirbaya

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் வரும் 22 ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ள நிலையில் அவர்களை தூக்கிடுவதற்காக மீரட்டை சேர்ந்த பவன் ஜலாத் என்ற நபர் வரவழைக்கப்படுகிறார். 

நிர்பயா வழக்கில் இந்த தண்டனையை நிறைவேற்றுதன் மூலம் சமூகத்தில் ஒரு வித மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், உயிர்களை பறிக்கும் தொழில்தான் எனக்கு சாப்பாடு போடுகிறது. ஒரு குற்றவாளிக்கு 25 ஆயிரம் வீதம் 4 பேரையும் தூக்கில் போட்டால், ரூபாய் 1 லட்சம் பணம் கிடைக்கும். அதை வைத்து எனது மகளின் திருமணத்தை நடத்த இருக்கிறேன் என கூறியுள்ளார்.