இந்தியா

என்னையும் கொன்றுவிடுங்கள்! அழுது கொண்டே மயங்கி விழுந்த நிர்பயா குற்றவாளியின் மனைவி!

Summary:

nirbaya accused wife crying

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 5 கொடூர மிருகங்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் பலரும் நிர்பயாவிற்கு  நீதி கிடைக்க வேண்டும் என்று போராடி வந்தனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து திகார் சிறையில் இருந்த குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த தீர்ப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. 

மூன்று முறை தூக்கு தண்டனையை நிறைவேற்ற தேதி அறிவிக்கப்பட்டு பின்னர், ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், குற்றவாளிகளில் இருவரான முகேஷ் சிங் மற்றும் அக்‌ஷய் குமார் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், இன்று அவர்களுக்கு தூக்குத் தண்டனை உறுதியானது.

குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங்கின் மனைவி புனிதா தேவி மற்றும் 6 வயது மகன் நேற்று பாட்டியாலா நீதிமன்றத்தின் வெளியே காத்திருந்தனர். நேரம் செல்லச்செல்ல க்‌ஷய் குமார் சிங்கின் மனைவி புனிதா தேவிஅழத் தொடங்கினார். 

மேலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியை கேட்டவுடனேயே, என் கணவர் சாகப்போகிறார். என்னையும் கொன்றுவிடுங்கள் என தன்னைத்தானே அடித்து கொண்டு அழுதுள்ளார். அப்படியே மயங்கியும் விழுந்துள்ளார். பின்னர் அவரை உறவினர்கள் அழைத்து சென்றார்கள்.


Advertisement