இந்தியா

Breaking : இன்று நள்ளிரவு முதல் அடுத்த 21 நாட்களுக்கு இந்தியா முழு ஊரடங்கு உத்தரவு..! பிரதமர் மோடி உத்தரவு..!

Summary:

Next 21 days full lockdown in india

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க கூறி கேட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் கடுமையான முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி. இந்தியாவை காப்பாற்ற மக்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறும், வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது எனவும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement