இந்தியா

திருமணம் முடிந்த 3 மாதத்திற்குள் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.! அதிர்ச்சி காரணம்.! சிக்கிய கணவன்.!

Summary:

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் சாஸ்தாங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தன்யா தாஸ் என்பவருக்கும

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் சாஸ்தாங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தன்யா தாஸ் என்பவருக்கும் லாரி ஓட்டுநர் ராஜேஸ் என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலே கணவர் தன்னை துன்புறுத்துவதாக, தன்யா தாஸ் தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தன்யாதாஸ் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தன்யாதாஸின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தன்யா தாசின் பெற்றோர் தன்னுடைய மகள் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை தான் காரணம் என தெரிவித்தனர். பெண் வீட்டார் மாப்பிள்ளை மீது சந்தேகம் இருப்பதாக கூறியதால் விசாரணையில், வரதட்சணை கொடுமை காரணமாக தன்யாதாஸ் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement