இந்தியா

திருமணத்திற்கு வராத பெற்றோர்.! மகளின் இறுதி சடங்கிற்கு வந்த சோகம்.! திருமணம் முடிந்து 2 மாதம் மட்டுமே நீடித்த வாழ்க்கை.!

Summary:

Newly married kerala women died in road accident

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த மகள் திருமணம் முடிந்த 2 மாதத்திலையே சாலை விபத்தில் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூரை அடுத்த சாவகாட் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் நந்த கிஷோர். கிஷோரும் அதே பகுதியை சேர்ந்த நைமா என்ற பெண்ணும் பள்ளி படிக்கும்போதில் இருந்தே காதலித்துவந்துள்ளனர். இவர்கள் காதல் பெற்றோருக்கு தெரியவர, இருவரும் வேறு வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 5-ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் அதேபகுதியில் மகிழ்ச்சியாக வசித்துவந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் அருகில் இருந்த வங்கிக்கு ஸ்கூட்டியில் சென்றுள்ளார் நைமா.

முன்னாள் சென்ற பேருந்து ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட நைமா எதிர்பாராமல் எதிரே வந்த லாரியில் மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் நைமாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகள் இறந்த செய்தி கேட்டு நைமாவின் பெற்றோர் மகளின் உடலை காண வந்தனர். மேலும், நைமாவை தங்களது முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் எனக்கேட்டு, அவரை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்துள்ளனர். மகளின் திருமணத்திற்கு வராதா பெற்றோர் கடைசியாக அவரது இறுதி சடங்கிற்கு வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Advertisement