வேகமாக வந்த ஆம்புலன்ஸ்..! உள்ளே புது கணவன் மனைவி செய்த காரியம்..! மடக்கி பிடித்த போலீசார்..!

வேகமாக வந்த ஆம்புலன்ஸ்..! உள்ளே புது கணவன் மனைவி செய்த காரியம்..! மடக்கி பிடித்த போலீசார்..!


newly-married-couple-escaped-using-ambulance-police-arr

நோயாளிகள் போல் நடித்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய புதுமண தம்பதியினரை போலீசார் மீட்டு தனிமைப்படுத்தியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் இருந்து முஸாஃபர்நகர் நோக்கி ஆம்புலன்ஸ் வாகனம் ஓன்று வேகமாக சென்றுகொண்டிருந்தது. இதனிடையே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி, சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.

அப்போது, நோயாளிகள் போல் உடை அணிந்து கணவன் மனைவி இருவரும் உள்ளே இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதை அடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இறுதியில், இருவரும் புதுமண தம்பதிகள் என்பதும், சொந்த ஊருக்கு திரும்ப இதுபோல் திட்டம் போட்டதும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து கணவன் மனைவி, ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த அவர்கள் உறவினர்கள் உட்பட 7 பேரை மீட்டு தனிமைப்படுத்தியுள்ளனர்.