விவசாயிகளுக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி! புதிய திட்டத்துடன் மோடி
விவசாயிகள் நலனை காக்கும் மிகப்பெரிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணித் தலைவர் வீரேந்திர சிங் கூறியுள்ளார்.
கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பாஜக அரசு விவசாயிகளின் நலனை காக்க தவறிவிட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. நாடு முழுவதும் விவசாயிகள் பல போராட்டங்களையும் நடத்தினர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்யுமாறு பலமுறை கொரிக்கையும் வைத்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக கட்சியின் விவசாய அணித் தலைவர் வீரேந்திர சிங், விவசாயிகளின் நலனை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்றார்.
-zt68t.jpeg)
இதற்காக மிகப்பெரிய திட்டம் ஒன்றை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது மட்டுமே தீர்வு அல்ல என்ற அவர், விவசாயிகளின் நலனை காக்க பல்வேறு வழிகள் உள்ளன என்றார். அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் நடவடிக்கையை மோடி எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.