இந்தியா

முதல் இரவுக்கு முன்பே அவசர அவசரமாக பிரிக்கப்பட்ட புது கணவன் மனைவி..! கல்யாணத்துக்கு வந்த உறவினரால் எழுந்த பிரச்சனை..! என்னாச்சு தெரியுமா.?

Summary:

New married couple separated after relation have corono

திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர் ஒருவரால் புதிதாக திருமணம் முடிந்த ஜோடியும், திருமணத்தில் கலந்துகொண்ட சுமார் 85 உறவினர்களும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த ஞாயிற்று கிழமை இளம்ஜோடி ஒன்றுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள் சுமார் 80 பேருக்கும் மேல் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதில் குருகிராமில் இருந்து வந்த உறவினரும் ஒருவர்.

திருமனத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அந்த நபர் கொரோனா பரிசோதை செய்துள்ளார். முடிவுகள் வர சற்று தாமதமானநிலையில் அந்த நபர் திருமணத்தில் பங்கேற்றுள்ளார். திருமண நாளான அன்று அவரது கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது.

அதில், அந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட நபர் திருமணத்தில் கலந்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனை அடுத்து புதிதாக திருமணம் செய்துகொண்ட ஜோடி முதல் திருமணத்தில் பங்கேற்ற சுமார் 85 உறவினர்கள் வரை அதிகாரிகள் அனைவரையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.

திருமணம் முடிந்த அன்றே புது ஜோடி உறவினரால் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement