வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா.? வருகிறது புதிய ரூல்ஸ்.. தயாரா இருங்க.!
2026 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று முதல் நாட்டில் பல புதிய நிதி மற்றும் பேங்கிங் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பொதுமக்களின் நிதி பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும் மாற்றும் நோக்கில் மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிதி அமைப்புகள் இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, PAN மற்றும் Aadhaar தொடர்பான விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குகள், வருமானவரி தொடர்பான சேவைகள் மற்றும் சில முக்கிய நிதி பரிவர்த்தனைகளுக்கு இந்த இணைப்பு வசியமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடன் மற்றும் கிரெடிட் ஸ்கோர் கணக்கீடு தொடர்பான நடைமுறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் நிதி நடத்தை அடிப்படையில் கிரெடிட் மதிப்பீடு அடிக்கடி புதுப்பிக்கப்படும் வகையில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குஷியோ குஷி! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000-ஆ..? அது எப்போ தெரியுமா?

இதன் மூலம் கடன் வழங்கும் முறையில் அதிக துல்லியம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி சேவைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வாடிக்கையாளர் அடையாளச் சரிபார்ப்பு முறைகளும் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றும், தங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து உரிய விளக்கங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த மாற்றங்கள் வரும்காலத்தில் நாட்டின் நிதி அமைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய திட்டம்! ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3000. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!