உலக நாடுகள் உஷார்நிலை.. பீதியை கிளப்பும் புதுவகை கொரோனா வைரஸ்.. திண்டாடும் இங்கிலாந்து..

உலக நாடுகள் உஷார்நிலை.. பீதியை கிளப்பும் புதுவகை கொரோனா வைரஸ்.. திண்டாடும் இங்கிலாந்து..



New corona virus found in England

இங்கிலாந்து நாட்டில் பரவிவரும் புதியவகை கொரோனா வைரஸால் அனைத்து நாடுகளும் உஷார் நிலையில் உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனாவின் உஹான் நகரத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போதுவரை சரியான பாடில்லை. இதனிடையே கொரோனா வைரஸின் மரபணுவில் பெரியளவில் மாற்றம்பெற்று புதுவகை கொரோனா வைரஸாக உருமாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இந்த புதுவகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே கண்டுடிபிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகள் வேலை செய்யாமல் போகலாம் எனவும், இந்த புதுவகை கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது எனவும் கூறப்படுகிறது.

corona

இதனால் இங்கிலாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டுளது. டிசம்பர் 31 வரை இங்கிலாந்து விமான சேவைகளை ரத்து செய்வதாக நமது மத்திய அரசும் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்தியாவை போலவே பெல்ஜியம், கனடா, பெரு உள்பட 30 நாடுகளால் இங்கிலாந்து நாட்டுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது.

இதனால் ஏற்றுமதி, இறக்குமதி போன்றவை பெருமளவில் பாதிக்கப்பட்டு இங்கிலாந்து உலக நாட்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதியவகை வைரஸ் அமெரிக்காவிலும் பரவ தொடங்கி இருப்பதாக மேலும் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்குதலில் உச்சத்தில் இருக்கும் அமெரிக்கா, இந்த புதுவகை கொரோனா வைரஸால் மேலும் பல பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் எனவும், கூட்டமாக கூடுவதை தவிர்க்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.