# Breaking 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் சூழந்து காணப்படுகிறது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. மேலும் தமிழகத்தில் டிசம்பர் 3-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணிநேரத்தில் தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமான மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தென்கிழக்கு, மத்திய வங்ககடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக் கூடும். இதனால் இன்று முதல் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.