இந்தியா

ஒரே பெண்ணை இரண்டுமுறை கடித்து கொன்ற பாம்பு..! முதல்முறை தப்பித்தப்பெண்ணை 16 நாட்கள் கழித்து மீண்டும் கடித்து கொன்ற சம்பவம்..!

Summary:

Mysterious dead of young women who bite by snake two times

இளம் பெண் ஒருவர் இரண்டுமுறை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை அடுத்த அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் இளம் பெண் உத்ரா. இவருக்கும், சூரஜ் எனபவருக்கும் கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்தநிலையில் இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. குடும்பத்துடன் உத்ரா பரக்கோடு என்னும் பகுதியில் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில், கணவனின் வீட்டில் இருந்தபோது உத்ராவை பாம்பு ஒன்று கடித்துள்ளது. சீரியசான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உத்ரா 16 நாள் தீவிர சிகிச்சைக்கு பிறகு தனது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்தவாறு தனது மேல் சிகிச்சையை கவனித்துவந்த உத்ரா சமீபத்தில் தனது கணவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கணவன் வீட்டிற்கு சென்ற அடுத்த நாளே மீண்டும் உத்ராவை பாம்பு கடித்துள்ளது. ஆனால், இந்தமுறை உத்ரா உயிரிழந்துவிட்டார். உத்ரா இறந்த செய்தி அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டநிலையில் தங்கள் மகள் மரணத்தில் சந்தனம் இருப்பதாக கூறி உத்ராவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அவர்கள் கொடுத்துள்ள புகாரில், பாம்பு கடித்து இறந்த அன்று தங்கள் மகள் இரண்டாவது மாடியில் உள்ள ஏசி அறையில்தான் உறங்கியுள்ளார். அறை முழுவதும் மூடப்பட்டிருக்கும்போது வெளியில் இருந்து பாம்பு உள்ளே வர வாய்ப்பு இல்லை. அதேநேரம் சூரஜ் உத்ராவின் அருகில்தான் உறங்கியுள்ளார்.

அடுத்தநாள் அவர் எழுந்து வெளியே சென்றபிறகு உத்ராவின் மாமியார் எழுப்ப சென்றபோதுதான் உத்ரா இறந்துகிடப்பதாக கூறியுள்ளார். ஏற்கனவே தங்கள் மகளுக்கு வரதட்சணை கொடுமை இருக்கும் நிலையில் சூராஜ்தான் தங்கள் மகளை திட்டமிட்டு கொலை செய்திருக்கவேண்டும் என கூறிஉள்ளன்னர்.


Advertisement