மர்மமாக இறந்துகிடந்த 11 பேர்! மர்மம் நிறைந்த வீட்டில் குடியேறியதும் மருத்துவர் செய்த முதல் காரியம்!

Mysteries house in delhi


Mysteries house in delhi

கடந்த வருடம் ஜூலை மாதம் டெல்லியில் உள்ள புராரி என்னும் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். 10 பேர் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் ஒருவர் மட்டும் விஷம் அருந்தி தற்கொலை செய்து இறந்து கிடந்தார்.

11 பேரும் எப்படி இறந்தனர்? கொலையா? தற்கொலையா என இன்றுவரை 11 பேர் மரணத்திற்கும் விடை தெரியவில்லை. இந்நிலையில் அந்த வீட்டில் பேய் இருப்பதாகக் கூறி, அங்கு யாரும் இதுவரை குடிபோகாமல் இருந்தனர்.

Mystery

இந்நிலையில் அந்த வீட்டில் மருத்துவர் மோகன் என்பவர் தனது குடும்பத்துடன் குடியேறப்போவதாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து நேற்று தனது குடும்பத்துடன் மோகன் அந்த மர்ம வீட்டில் குடியேறியுள்ளார்.

பிரதான சாலைக்கு அருகில் இருப்பதால் இந்த வீடு தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், தனக்கு மூடநம்பிக்கைகள் பிடிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அந்த வீட்டில் மருத்துவப் பரிசோதனை மையத்தை தொடங்கியுள்ள அவர், ஹோமங்களையும் நடத்தியுள்ளார்.