இந்தியா

நண்பர்கள் தானே என நம்பி வீட்டில் தங்கவைத்த நபர்.! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

Summary:

நண்பர்கள் தானே என நம்பி வீட்டில் தங்கவைத்த நபர்.! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரேம் கிஷோர் எனபவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்துவந்துள்ளார். இந்தநிலையில் அவர்கள் மூவரும் கடந்த வாரம் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். அவர்கள் மூவரின் முகங்களும் பாலித்தீன் கவரால் மூடப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மர்ம நபர்கள் யாரோ கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் முதலில் சதேகித்தனர். ஆனால் பிரேம் கிஷோரின் வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு இரண்டு ஆண்கள் பிரேம் வீட்டில் இருந்து வெளியில் சென்றது தெரியவந்தது. ஆனால் அந்த இருவரின் புகைப்படங்கள் பிரேம் வீட்டில் ஏற்கனவே இருந்துள்ளது. இதனையடுத்து  சிசிடிவியில் பிரேம் வீட்டில் இருந்து வெளியில் சென்றக வுரவ் மற்றும் சவுகான் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கவுரவும், சவுகானும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரேம் கிஷோருடன் ஒரே இடத்தில் வேலை செய்துள்ளனர். பின்னர் பிரேம் சுயமாக தொழில் தொடங்கி நல்ல நிலைக்கு வந்துள்ளார். இதுபற்றி தெரிந்து கொண்ட இருவரும் பிரேமுடன் நட்பை மீண்டும் புதுப்பித்தனர். இந்தநிலையில், சம்பவத்தன்று இரவு பிரேம் வீட்டுக்கு வந்த கவுரவ், சவுகான் ஆகிய இருவரும் தங்கள் ஊருக்கு செல்ல வேண்டிய ரயில் புறப்பட்டு விட்டது. அதனால் இன்று ஒருநாள் எங்களுக்கு வீட்டில் தங்க இடம் கொடுக்குமாறு பிரேமிடம் கேட்டுள்ளனர்.

இருவரும் தனது நண்பர்கள் தானே என நம்பி வீட்டில் தங்க இடம் கொடுத்துள்ளார் பிரேம். இதனையடுத்து நள்ளிரவில் நன்றாக தூங்கி கொண்டிருந்த பிரேம், அவரது மனைவி லலிதா மற்றும் பிரேமின் மகன் நைனிக் ஆகிய மூவரையும் அவர்கள் கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த பணத்துடன் தப்பியது தெரியவந்தது. 


Advertisement