தெலுங்கானாவில் நடந்த மற்றொரு கொடூரம்! முகம் சிதைந்த நிலையில் ஆடையின்றி கிடந்த பெண்ணின் உடல்!

தெலுங்கானாவில் நடந்த மற்றொரு கொடூரம்! முகம் சிதைந்த நிலையில் ஆடையின்றி கிடந்த பெண்ணின் உடல்!


Murder

தெலங்கானாவின் செவேல்லா நகருக்கு அருகே ஒரு பாலத்திற்கு கீழே நிர்வாண நிலையில், முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஊர் மக்கள் பார்த்து விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனை அடுத்து திவீர விசாரணை நடத்தி வருகின்றனர். முகம் சிதைக்கப்பட்டிருந்த காரணத்தால் யார் அந்த பெண் என தெரியவில்லை. யாரோ ஒருவர் அந்த பெண்ணின் முகத்தில் பெரிய கல்லை போட்டு முகம் தெரியாத படி கொலை செய்துள்ளனர்.

Murder

ஆனால் இந்த கொலை இங்கு நடைப்பெற்றதா அல்லது வேறு இடத்தில் நடைப்பெற்றதா என்ற விவரமும் இன்னும் தெரிவில்லை என காவல் அதிகாரி கூறியுள்ளார். மேலும் இந்த பெண் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற விபரம் அனைத்தும் பிரேத ப‌ரிசோதனை‌க்கு பிறகு தான் தெரியவரும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்து சார்பில் புகார் மனுவை பெற்றுள்ளோம். அதை வைத்து வழக்குப் பதிவு செய்வோம் என்றும் காவல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். கொலை நடந்த இந்த பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கேமராவின் மூலம் விசாரணை செய்யவுள்ளனர்.

அனைத்து காவல் நிலையத்திற்கும் காணாமல் போன பெண்களின் விபரம் குறித்து புகார்கள் எதாவது வந்துள்ளதா என விசாரித்து வருகின்றனர்.