குறுக்குச்சாலையில் அலட்சியமாக வந்ததால் சோகம்; இரண்டு சிறுமிகள் படுகாயம்.!mumbai-vasai-child-injured-in-accident

 

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மும்பை, வசாய் பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தம்பதிகள் இரண்டு குழந்தைகளும், அங்குள்ள சாலை வழியாக நடந்து சென்றுகொண்டு இருந்தனர். 

விபத்தின் விடியோவை காண இங்கு அழுத்தவும்: https://x.com/SajjanarVC/status/1764155580950942005?s=20

அச்சமயம் அவ்வழியே வந்த வாகனம் ஒன்று, சிறுமிகள் இருவரும் சாலையை கடப்பதை காணாது மோதி இருக்கிறது. 

இதில் வாகனத்தின் சக்கரம் சிறுமிகளின் மீது ஏறி இறங்கி இருக்கிறது. படுகாயமடைந்த சிறுமிகள் இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

விபத்தின் பதைபதைப்பு காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.