3 மாத பச்சிளம் பெண் குழந்தைக்கு தாய் செய்த கொடூர செயல்.. அம்மா செய்யும் காரியமா இது?..!Mumbai Sangharsh Sadan Area Mother Sapna Bajrang Magdoom Aged 36 Murder his Baby

தாய் தனது மூன்று மாத மகளை கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கொலையை செய்துவிட்டு, காவல் துறையினரிடம் சிக்கிய பின்னர் பெண்மணியின் நாடகம் அம்பலமானது குறித்து விவரிக்கிறது செய்தி பின்னணி. 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பெர்பண்டார், சங்கர்ஷ் சதான் பகுதியை சார்ந்தவர் சப்னா பஜ்ரங் மஃதூம் (வயது 36). இவர் சம்பவத்தன்று தனது குழந்தையை மற்றொரு பெண்மணி கடத்தி சென்றதாகவும், குளோரோபாம் அடங்கிய மயக்க மருந்து தெளிக்கப்பட்ட கைக்குட்டையை வைத்து பெண்ணின் மூக்கில் எழுதியதால் சப்னா மயங்கியதாகவும் தெரிவித்துள்ளார். 

அருகில் உள்ள க்ளாசௌக்கி காவல் துறையினர் விபரத்தை கேட்டறிந்து கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை உடனடியாக ஆராய தொடங்கி, குழந்தையை கண்டறிய தனிப்படையும் அமைக்கப்பட்டது. சி.சி.டி.வி காமிராவில் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பான எந்த காட்சிப்பதிவுகளும் இல்லை. 

maharashtra

பல கோணத்தில் விசாரணை செய்தும் வழக்கில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால், விசாரணை சப்னாவின் பக்கம் திரும்பியுள்ளது. அதிகாரிகள் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், சப்னா தனது 3 மாத குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2013 ஆம் வருடம் சப்னாவுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், ஆண் குழந்தைக்காக பல முயற்சிகள் செய்தும் பெண்ணாக குழந்தைகள் கருவில் உருவாகியுள்ளது. 

இரண்டு முறை கருகலைப்பும் சப்னா செய்துள்ள நிலையில், சமீபத்தில் கருவுற்று இருக்கையில் குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொண்டு இருக்கிறார். கருக்கலைப்பு செய்ய இயலாத சூழலில், 3 மாதங்களுக்கு முன்னதாக குழந்தையும் பிறந்துள்ளது. பெண்ணின் மாமியாரின் வற்புறுத்தலால் ஆண் குழந்தைக்காக ஏங்கிய நிலையில், இறுதியாக பிறந்த பெண் குழந்தையை கொலை செய்ய சப்னா திட்டமிட்டுள்ளார். 

maharashtra

இதனையடுத்து, கணவர் பணிக்கு புறப்பட்டு சென்றதும், குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்துள்ளார். பின்னர், வழக்கு பெண்ணின் மீது திரும்பாமல் இருக்க குழந்தை கடத்தல் நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது. பெண்மணியின் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், அவர் கொடுத்த தகவலின் பேரில் 3 மாத பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.