வைரல் வீடியோ: கொஞ்சம் விட்ருந்தா உயிரே போயிருக்கும்.. கடவுள்போல் வந்து காப்பாற்றிய பெண் ரயில்வே போலீஸ்..

வைரல் வீடியோ: கொஞ்சம் விட்ருந்தா உயிரே போயிருக்கும்.. கடவுள்போல் வந்து காப்பாற்றிய பெண் ரயில்வே போலீஸ்..Mumbai railway police saved passenger lives viral video

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தநிலையில், அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார் பெண் ரயில்வே போலீஸ்.

மும்பையின் காட்கோபர் ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டது. ரயிலில் சற்றும் கூட்டம் அதிகமாக இருந்தநிலையில், பயணிகள் சிலர் ரயிலின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்துள்ளனர்.

அப்போது படியில் இருந்த கூட்டத்துக்கு இடையே உள்ளே ஏறமுயன்ற பயணி ஒருவர், நிலைதடுமாறி பிளாட்பாரத்துக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் விழுந்துள்ளார். ரயில் செல்லும் வேகத்திற்கு, அந்த பயணி தண்டவாளத்துக்குள் இழுத்துச்செல்லப்படுவதை பார்த்த அங்கிருந்த ஹேமு திரிவேதி என்ற பெண் ரயில்வே போலீஸ் அதிகாரி, உடனே பாய்ந்து சென்று அந்த பயணியை வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளார்.

சிறிது தாமதமாகி இருந்தாலும், அந்த பயணியின் உயிரே போயிருக்கும் என்ற நிலையில், துரிதமாக செயல்பட்டு, அந்த பயணியின் உயிரை காப்பாற்றிய பெண் ரயில்வே போலீஸ் அதிகாரிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.