உயர்நீதிமன்ற நீதிபதியின் அறையில் 5 அடி நீள பாம்பு.. ஆடிப்போன அதிகாரிகள்.!Mumbai Bombay High Court Justice NR Borkar Room 5 Feet Snake Captured Video

நீதிபதியின் அறையில் இருந்து பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரின் கோட்டையில் பாம்பே உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் ஒருவராக இருப்பவர் நீதியரசர் என்.ஆர். போர்க்கர். 

நீதியரசர் என்.ஆர் போர்கருக்கு என தனி அறை நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிலையில், இன்று காலை அவரது அறைக்குள் பாம்பு ஒன்று தென்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

maharashtra

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தொண்டு நிறுவன ஊழியர்கள், நீதிபதி அறைக்குள் இருந்த 5 அடி நீள பாம்பினை பிடித்து பத்திரமாக கொண்டு சென்றனர். விசாரணையில், அந்த பாம்பு விசமில்லாத பாம்பு என்பது உறுதியானது. 

நீதிபதியின் அறைக்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நடைபெறும் போது நீதிபதி தனது அறையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.