இந்தியா

திடீரென சிறுமி தலையை கவ்விய சிறுத்தை.! தனது மகளை காப்பாற்ற தாயார் செய்த துணிச்சல் செயல்.!

Summary:

மஹாராஷ்டிரா மாநிலத்தில் 5 வயது மகளை தாக்கிய சிறுத்தையை, சிறுமியின் தாய் துணிச்சலுடன் அடித்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் 5 வயது மகளை தாக்கிய சிறுத்தையை, சிறுமியின் தாய் துணிச்சலுடன் அடித்து துரத்தியுள்ளார். 

மஹாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஜூனோனா கிராமத்தில் வசித்து வருபவர் அர்ச்சனா. அந்த கிராமம் அடர்ந்த வனப்பகுதியாகும். அந்த வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. இந்தநிலையில் அர்ச்சனா தனது 5 வயது மகள் பிரஜக்தா என்பவருடன் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சிறுத்தை ஒன்று திடீரென சிறுமியை தாக்க முயற்சித்து சிறுத்தை பிரஜக்தாவின் தலையை தன் வாயால் கவ்வியது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அர்ச்சனா, தனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் அருகிலிருந்த மரக்கட்டையால் சிறுத்தையை அடித்து, அதனுடன் சண்டையிட்டு மகளை மீட்கப் போராடியுள்ளார். இதனால், சிறுமி மீதான தாக்குதலை விடுத்து அர்ச்சனாவின் பக்கம் சிறுத்தை திரும்பியது. ஆனாலும் விடாமல் மரக்கட்டையால் சிறுத்தையை அடித்து துரத்தியுள்ளார்.

சிறுத்தை தாக்கியதில் சிறுமியின் தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சிறுமியை நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் வனத்துறையினர் அனுமதித்தனர். இதுகுறித்து அர்ச்சனா கூறுகையில், என் மகளை காப்பாற்ற முயன்றால் சிறுத்தை என்னை தாக்கும் என பயந்தேன். ஆனால் என் மகள் இறப்பதை நான் எப்படி பார்த்து கொண்டிருக்க முடியும், அதனால் தான் துணிச்சலுடன் செயல்பட்டேன் என கூறியுள்ளார்.


Advertisement