இந்தியா

நடு ரோட்டில் காரிலையே நடந்த பிரசவம்..! இக்கட்டான நேரத்தில் உதவிய போலீஸ் அதிகாரியின் பெயரை குழந்தைக்கு சூட்டிய தாய்..!

Summary:

Mother named his daughter who helped on difficult situation

இக்கட்டான நிலையில் தனது பிரசவத்திற்கு உதவிய பெண் போலீஸ் அதிகாரிக்கு நன்றி செலுத்தும் வகையில் பிறந்த குழந்தைக்கு போலீஸ் அதிகாரியின் பெயரையே வைத்துள்ளார் குழந்தையின் தாய்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் என்னும் பகுதியை சேர்ந்தவர் நைனு கன்வார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரது சகோதரர் நைனுவை தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.

கார் பாதி தூரம் சென்ற நிலையியல் நடுவழியில் பழுதாகி நின்றுள்ளது. அதேநேரம் நைனுவிற்கும் பிரசவவலி அதிகரித்துள்ளது. தனி ஆளாக என்ன  செய்வது என்று தெரியாமல் நைனுவின் சகோதரர் துடித்தநிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் துணை கமிஷனர் ப்ரீத்தி சந்திரா காரின் அருகில் வந்து விசாரித்துள்ளார்.

நிலைமையை புரிந்துகொண்ட அவர் உடனே அங்கிருந்த காவலர்களை அழைத்து, காரை சுற்றி மறைப்புகள் அமைத்துள்ளார். பின்னர் பெண் காவலர்கள் சிலரை நைனுவிற்கு உதவியாக அருகில் அமரவைத்துவிட்டு, டாக்டரை அழைத்து வர சில காவலர்கள் விரைந்துள்ளனர். இதனிடையே காரிலையே நைனுவிற்கு அழகான பெண் குழந்தை சுக பிரசவமாக பிறந்துள்ளது.

அதன்பின்னர் குழந்தை, தாய் இருவரையும் வேறொரு காரில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார் துணை கமிஷனர் ப்ரீத்தி சந்திரா. இந்நிலையில், இக்கட்டான நிலையில் தனக்கு உதவிய துணை கமிஷனர் ப்ரீத்தி சந்திராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக தங்கள் மகளுக்கு ப்ரீத்தி சந்திரா என பெற்றோர் பெயர் வைத்துள்ளனனர்.


Advertisement