ஒன்றன்பின் ஒன்றாக 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்..! பதறவைக்கும் கொடூர செயல்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்.!!

ஒன்றன்பின் ஒன்றாக 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்..! பதறவைக்கும் கொடூர செயல்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்.!!


mother-killed-6-children-by-throwing-them-in-to-well

கணவருடன் ஏற்பட்ட தகராறால் ஒரு பெண் 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, ராய்காட் மாவட்டத்தில் உள்ள காரவலி கிராமத்தில் வசித்து வரும் சிக்குரி, கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ருணா ஷானி. இவர்களுக்கு 5 பெண்குழந்தைகள் உட்பட 6 குழந்தைகள் உள்ளனர். ருணா ஷானியின் கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக குடும்பம் வறுமையில் வாடியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று முந்தினம் இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த ருணா ஷானி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். தனது குழந்தைகளுடன் கிணற்றுக்கு வந்த அவர் கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த குழந்தைகள் மூழ்கியுள்ளனர். பின்னர் கடைசியாக அவரும் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இந்த நிலையில், இதனை கண்ட அக்கம்பக்கத்தினர்  இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சிலர் ஓடோடி வந்தனர். அவர்கள் கிணற்றில் குதித்த ருணா ஷானியை வலுக்கட்டாயமாக வெளியே தூக்கி வந்து காப்பாற்றினர்.

மேலும் கிணற்றில் மூழ்கிய 6 குழந்தைகளையும் மீட்டனர், ஆனால் இதற்குள் குழந்தைகள் அனைத்தும் இறந்துவிட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி, ருணா ஷானியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது கணவரை பழிவாங்கும் எண்ணத்துடன் இப்படி செய்ததாக அவர் கூறினார். நீரில் மூழ்கிய குழந்தைகளில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட 5 பெண் குழந்தைகளும் அடங்கும். பின்னர் ருணா ஷானியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.