4 வயசுதான் ஆகுது!! துடிக்க துடிக்க மகனை கொலை செய்த தாய்!! என்ன காரணம் தெரியுமா??

4 வயசுதான் ஆகுது!! துடிக்க துடிக்க மகனை கொலை செய்த தாய்!! என்ன காரணம் தெரியுமா??


Mother killed 4 years old son who not listening online classes

ஆன்லைன் வகுப்பில் பாடம் கவனிக்காத நான்கு வயது மகனை கொலை செய்துவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சம்பவமானது மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே நடந்துள்ளது. பாத்தார்டி பாட்டா பகுதியில் உள்ள சாய் சித்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபவர் சாகர் பாட்டக். இவரது மனைவி சிக்கா(23). இவர்களுக்கு நான்கு வயதில் ரிதான் என்ற மகன் இருந்தார்.

ரிதான் தொடக்கப்பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தநிலையில், சிறுவனுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுள்ளது. ஆனால் ஆன்லைன் வகுப்பில் அமர்ந்து படிக்காமல் ரிதான் விளையாட்டுத்தனமாக இருந்துள்ளான். இதானால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் தாய், அருகில் இருந்த தலையணையை எடுத்து சிறுவனின் முகத்தில் வைத்து அமுக்கியுள்ளார்.

இதில் சிறுவன் மூச்சுவிட முடியாமல், மூக்கில் இருந்து இரத்தம் வழிந்தபடி உயிரிழந்தான். இதனை பார்த்து பதறிப்போன தாய், மகனை கொலைசெய்த குற்ற உணர்ச்சியில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.