கூட தூங்கின குழந்தைய காணோம்.. தாய் கொடுத்த உறையவைக்கும் வாக்குமூலம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!

mother killed 1 and half year child in kerala


mother-killed-1-and-half-year-child-in-kerala

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் பிரணவ். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு வியான் என்ற ஒன்றரை வயது மகன் இருந்தார். இந்நிலையில் இவர்கள் திங்கட்கிழமை தனது மகனை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், நேற்று காலை 10 மணியளவில் அவர்கள் வீட்டின் அருகே உள்ள தாயில் கடற்கரைப்பகுதியில் குழந்தை வியான் உடல் கரை ஒதுங்கியுள்ளது. 

மேலும் வீட்டிற்கு அருகேயுள்ள கடற்கரை என்பதால் போலீசாருக்கு பிரணவ் மற்றும் சரண்யா மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட நிலையில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர் . அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களது வீட்டில் பயன்படுத்திய போர்வை உடை ஆகியவற்றை கைப்பற்றி, எவரேனும் கடற்கரைக்குச் சென்றிருந்தால் அதில் உப்பு படிந்திருக்கும் என தடவியல் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

killed

இதனைத் தொடர்ந்து தாய் சரண்யா தான்தான் குழந்தையை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.இந்நிலயில் அவர் குழந்தை நள்ளிரவில் அழுது கொண்டிருந்தது. அதனை சமாதானப்படுத்த கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தை அழுகையை நிறுத்தி அமைதியாக இருந்த நிலையில் கடலை ஒட்டிய பகுதியில் குவிக்கப்பட்டுள்ள கற்குவியலின் மீது குழந்தையை வீசியெறிந்து உள்ளார். அதன்பின்னர் குழந்தையை அலை இழுத்து  செல்வதைப் பார்த்து அது இறந்துவிட்டதை உறுதிசெய்த பின்னர் சரண்யா வீடு திரும்பியுள்ளார்.

மேலும்  கடந்த சில மாதங்களாக பிரணவ் மற்றும் சரண்யாவுக்கு இடையே பிரச்சினை நீடித்துள்ளது. இந்நிலையில் சரண்யாவிற்கு விவாகரத்து பெற்று, அவருக்கு வேறு திருமணம் செய்துவைக்க அவர்களது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அதற்கு பிரணவ் ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில் சரண்யா குழந்தையை கொல்ல முடிவு செய்து அதனையும் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் சரண்யாவை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.