இறந்த தாயின் அருகில் கூட வரமறுத்த மகன்.! தகனம் செய்த அதிகாரிகள்.! காரில் இருந்து வேடிக்கை பார்த்த உறவினர்கள்.!

இறந்த தாயின் அருகில் கூட வரமறுத்த மகன்.! தகனம் செய்த அதிகாரிகள்.! காரில் இருந்து வேடிக்கை பார்த்த உறவினர்கள்.!


mother-dies-from-coronavirus-in-punjab-son-refuses-to-c

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனோவால் உயிர் இழந்த 69 வயதான பெண்மணிக்கு உறவினர்கள் மற்றும் இறந்தவரின் மகன் உட்பட இறுதி சடங்கு செய்ய மறுத்துவிட்ட நிலையில், அதிகாரிகளே இறந்தவரின் உடலை தகனம் செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

பஞ்சாபில் உள்ள சிம்லாபுரி என்னும் பகுதியைச் சேர்ந்த சுரிந்தர் கவுர் என்ற பெண் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். உயிர் இழந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் ஒப்படைக்க, அவர்கள் உடலை வாங்க மருத்துள்ளனர்.

corono

இதுகுறித்து பேசியுள்ள அதிகாரிகள், குறிப்பிட்ட பெண் இறந்தபிறகு அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாதுகாப்பு உடைகள் அணிந்து இறுதி சடங்கை மேற்கொள்ளலாம் என கூறியும் அவர்கள் இறந்தவரின் உடலை வாங்கவோ அல்லது அவருக்கு இறுதி சடங்கு செய்யவோ முன்வரவில்லை.

மேலும், இதில் மேலும் கொடுமை என்னவென்றால், இறந்தவரின் மகன் தனது தாய்க்கு இறுதி சடங்கு செய்யவோ, அல்லது அவரது முகத்தை பார்க்க கூட அருகில் வரவில்லை. இதனை அடுத்து, மாவட்ட நிர்வாகமே அந்த பெண்ணிற்கு இறுதி சடங்குகள் செய்து உடலை தகனம் செய்தது.

இறுதி சடங்குகள் மற்றும் உடல் தகனம் செய்யப்படுவதை இறந்தவரின் மகன் உட்பட அவரது உறவினர்கள் அனைவரும் காரில் அமர்ந்தவாறு தூரத்தில் இருந்து பார்த்துள்ளனர்.