இந்தியா

பெண் குழந்தையை பாதுகாப்போம்னு சொன்னீங்களே இப்ப என் மகளோட நிலைமையை பார்த்தீர்களா ? மோடியை சரமாரியாக விளாசும் தாய் .!

Summary:

பெண் குழந்தையை பாதுகாப்போம்னு சொன்னீங்களே இப்ப என் மகளோட நிலைமையை பார்த்தீர்களா ? மோடியை சரமாரியாக விளாசும் தாய் .!

அரியானா மாநிலத்தில் சிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த 19 வயது மாணவி,  சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்றவர். நேற்று முன் தினம் கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருக்கும் போது காரில் வந்த மூன்று மர்மநபர்கள்  அவரை கடத்திச் சென்று மறைவான பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், அங்குள்ள பேருந்து நிலையத்தில் மாணவியை தூக்கி வீசி விட்டு அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் இடம் நடந்ததை தெரிவித்துள்ளார். பிறகு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடந்து மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ள, குற்றவாளி தெரிந்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குற்றவாளிகளை தேடி வருவதாகவும், சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் மோடிக்கு பல கேள்விகளையும், வேண்டுகோளையும் வைத்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, 

என் மகள் நல்ல புத்திசாலி. நன்றாக படிப்பாள். சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக பிரதமர் மோடியிடம் விருது பெற்றுள்ளார்.
ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.
மோடி அவர்களே., பெண்களை படிக்க வையுங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்போம் என்கிறார். ஆனால் எப்படி? 
என் மகளுக்கு  நீதி கிடைக்க வேண்டும். என் மகளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் இதற்கு ஒரு முடிவு சொல்லவேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, அரியானா மாநிலத்தின் முதல்வர் ''மனோகர் லால் கட்டார் "மாணவி விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.


Advertisement