இந்தியா

இந்தியா அழிவை நோக்கி செல்லும் ஒருவரின் தலைமையில் செயல்படுகிறது - மோடியை விமர்சித்த பிரபல நடிகர்!

Summary:

moodi

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து இந்திய மக்கள் பெரும்பாலோனோர் மோடி அவர்களுக்கும், அமித்ஷா அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இவர்களது கண்டனத்தினால் பலரும் எரிச்சல் அடைந்துள்ளனர். எதிர்கட்சியினர்கள் பலர் இதனை ஆதரித்துவரும் நிலையில் சிலரது கண்டனம் இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தார்த் க்கான பட முடிவு

இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா  நாடானது அழிவை நோக்கிப் பயணிக்கும் ஒருவரின் தலைமையைக் கொண்டுள்ளது. இதெல்லாம் திசை திருப்பும் வேலை. இதை எல்லாம் தெரிந்தே தான் செய்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

 


Advertisement