மனிதரை போலவே மெட்ரோ ரயிலில் பயணித்த குரங்கு.! அனைவரையும் வியக்கவைக்கும் வைரல் வீடியோ.!

மனிதரை போலவே மெட்ரோ ரயிலில் பயணித்த குரங்கு.! அனைவரையும் வியக்கவைக்கும் வைரல் வீடியோ.!


monkey-in-metro-train

பொதுவாக குரங்குகள் என்றாலே சேட்டை செய்வதுதான் அனைவருக்கும் நினைவில் வரும். ஆனால் இந்தியாவின் தலைநகர் டெல்லியில், மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று மிகவும் சமத்தாக சுற்றித் திரிந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளது. இதனை வீடியோ எடுத்த பயணி ஒருவர், அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மெட்ரோ ரயில் பெட்டியில் ஏறிய குரங்கு, ரயில் பெட்டிக்குள் ஆங்காங்கே சுற்றி வருகிறது. பின்னர் ஒரு இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து வருகிறது. ஆனால் அந்த குரங்கு ரயிலில் இருக்கும் ஒருவரையும் அது காயப்படுத்தவோ தொல்லைகொடுக்கவோ இல்லை. அதேபோல், அதிலிருந்த பயணிகளும் குரங்கை விரட்டவோ பயமுறுத்தவோ இல்லை. 

ரயிலில் பயணித்த பலரும் குரங்கு செய்துக்கொண்டிருந்ததை கண்டு ரசித்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், யமுனா நதி ஸ்டேஷனில் இருந்து ஐ.பி. ஸ்டேஷன் வரை குரங்கு ரயிலில் பயணித்து உள்ளது. பயணியரை தொந்தரவு செய்யாமல் இருந்த அது பின் ரயில் நிலைய வளாகத்தில் இருந்து வெளியேறிவிட்டது என தெரிவித்துள்ளனர்.