இந்தியா லைப் ஸ்டைல்

வைரல் வீடியோ: காய்கறி வெட்ட உதவும் குரங்கு.. இணையத்தில் கலக்கும் சூப்பர் வீடியோ காட்சி..

Summary:

காய்கறி வெட்ட உதவும் குரங்கு ஒன்றின் வீடியோ இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

காய்கறி வெட்ட உதவும் குரங்கு ஒன்றின் வீடியோ இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

பொதுவாக மக்களுடன் மிகவும் நெருங்கிப்பழக்கக்கூடிய விலங்குகளில் ஒன்று குரங்கு. பல இடங்களில் மக்கள் குரங்குகளை தங்கள் செல்லப்பிராணிகளாகவும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் குரங்கு ஒன்று காய்கறி வெட்ட உதவும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.

KIRTI @Tripathikirti21 என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் இந்த காட்சி இடம் பெற்றுள்ளது. சுமார் 59 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ காட்சியில், பெண்ணின் முகம் காட்டப்படாத நிலையில், அவர் எடுத்து தரும் காய்கறிகளை அவருக்கு எதிரில் அமர்ந்திருக்கும் அந்த குரங்கு பாதியாக வெட்டி பாத்திரத்தில் போடுகிறது.

இதற்காகவே பயிற்சி வழங்கப்பட்டதுபோல் பொறுப்பாக அந்த குரங்கு காய்கறி வெட்டும் காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement