4 வயது குழந்தையை நான்காவது மாடியிலிருந்து வீசி கொலை செய்த தாய்.. பெங்களூருவில் பயங்கரம்..!

4 வயது குழந்தையை நான்காவது மாடியிலிருந்து வீசி கொலை செய்த தாய்.. பெங்களூருவில் பயங்கரம்..!Mom threw own daughter from 4 floor dead

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய 4 வயது மகளை நான்காவது மாடியிலிருந்து கீழே வீசி கொலை செய்துள்ளார். மேலும் அவரும் தற்கொலை செய்துகொள்ள முயன்ற போது அருகில் இருந்தவர்கள் தடுத்துள்ளனர்.

பல் மருத்துவராக பணியாற்றி வரும் அந்த பெண்ணால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாததாலும், தன் வேலையில் கவனம் செலுத்த முடியாததாலும் இந்த முடிவினை எடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  வீடியோவில் அந்த பெண் எப்போதும் போல சாதாரணமாக தன் மகளை தூக்கி சென்றுள்ளார். திடீரென யாரும் எதிர்பாராத போது குழந்தையினை கீழே வீசியுள்ளார். கீழே விழுந்த குழந்தை இறந்துவிட்டது.