தமிழகத்தில் ஏழைக்காக உழைத்து உயிரைவிட்ட மருத்துவரை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!.

தமிழகத்தில் ஏழைக்காக உழைத்து உயிரைவிட்ட மருத்துவரை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!.


modi wishes to 5 rupees doctor

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ஜெயச்சந்திரன், இவர் தனது வீட்டிலேயே வெறும் 5 ரூபாய்க்கு ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதனாலேயே இவர் 5 ரூபாய் டாக்டர் என அழைக்கப்பெற்றார்.

இவர் பல ஏழை மக்களுக்கு  இலவசமாக மருத்துவம் பார்த்ததோடு மட்டுமின்றி, தனது சொந்த பணத்தையும் ஏழை மக்களின் மருத்துவத்திற்காக செலவு செய்து வந்துள்ளார். 

5 ரூபாய் டாக்டர் என அழைக்கப்படும் பிரபல சென்னை மருத்துவர் ஜெயச்சந்திரன் வயது முதிர்வு காரணமாக  தனது 71வது வயதில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். 

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "சென்னையை மையமாகக் கொண்டு சேவை புரிந்து வந்த  மருத்துவர் எஸ்.ஜெயச்சந்திரன் ஒர் மக்கள் ஹீரோ. அவர் தன் வாழ்க்கையை மற்றவர்கள் நலனுக்காகவே அர்ப்பணித்தவர்" என்று மருத்துவர் ஜெயச்சந்திரனை புகழ்ந்துள்ளார்.