அரசியல் இந்தியா மருத்துவம்

கொரோனா அச்சுறுத்தல்! இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி மக்கள் முன்பு!

Summary:

modi will talk about corona


கொரோனா பாதிப்பு குறித்தும், அதனை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகள் குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஆரம்பித்து உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில்,இந்தியாவில் இதுவரை ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169-ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், கொரோனாவை எதிர்கொள்வது குறித்தும், அதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் இன்று இரவு 8 மணி அளவில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத பிரதமர் மோடி, கொரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மாநில அரசுகள், மருத்துவத் துறையினர், துணை மருத்துவப் பணியாளர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


 


Advertisement