உலகத்தின் மிக அழகான மொழியான தமிழை கற்க முடியவில்லை.! பிரதமர் மோடி வேதனை.!

உலகத்தின் மிக அழகான மொழியான தமிழை கற்க முடியவில்லை.! பிரதமர் மோடி வேதனை.!


modi-talk-about-tamil-VR9VR2

உலகம் முழுவதும் பிரபல மொழியாக உள்ள தமிழை கற்க முடியாதது தனக்கு வருத்தமளிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காவோ அல்லது அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவோ எப்போது தமிழகம் வந்தாலும் அவர் தமிழில் பேசுவது வழக்கம். அதேபோல் பாரதியார் கவிதைகளையும், திருவள்ளுவரின் திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசுவதை வழக்கமாக செய்து வருகிறார். 

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 74-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.

modiஇந்நிலையில் இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், தமிழ் கற்க வேண்டும் என நான் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியில் என்னால் வெற்றிபெற முடியவில்லை . இந்த உலகத்திலேயே மிக அழகான மொழிகளில் தமிழும் ஒன்று. என்னால் தமிழ் சரியாக கற்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.