அரசியல் இந்தியா

பாகிஸ்தானை முடித்து மண்ணை கவ்வ வைக்க 10 நாட்கள் ஆகாது! மோடி அதிரடி!

Summary:

modi talk about pakistan


இந்தியாவுடன் மறைமுக போரில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க இந்திய படைகளுக்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆகாது என்று பிரதமர் மோடி கூறினார்.

டெல்லியில், பிரதமரின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) வருடாந்திர பேரணி நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே காஷ்மீரில் பிரச்சினை இருந்து வருகிறது. ஆனால் தற்போது, காஷ்மீர் மட்டுமின்றி, நாட்டின் அணைத்து பகுதிகளும் அமைதியாக இருக்கின்றன. 

இந்தியாவிடம் 3 போர்களில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. ஆனாலும், இந்தியாவுடன் மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது பாகிஸ்தான். சில கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை (திருத்த) சட்டத்தை எதிர்க்கின்றன. 

நம் நாட்டின் முந்தைய அரசுகள் தங்கள் செயலற்ற தன்மை காரணமாக பாகிஸ்தானின் போரை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக பார்த்தன. ஏதேனும் நடவடிக்கை எடுக்க அனுமதி தருமாறு நமது ராணுவம் கேட்டால் கூட அவர்கள் அனுமதி அளிக்க மாட்டார்கள். ஆனால், பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க இந்திய படைகளுக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தேவைப்படாது என்று பிரதமர் மோடி பேசினார்.
 


Advertisement