அரசியல் தமிழகம் இந்தியா

ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை... 1967-க்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பே அளிக்கவில்லை.! ராகுலை சாடிய மோடி.!

Summary:

ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை... 1967-க்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பே அளிக்கவில்லை.! ராகுலை சாடிய மோடி.!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது என பாஜகவை சாடினார். இந்தநிலையில் நேற்று ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பிரதமர் மோடி பேசுகையில், பலமுறை தோல்வியை சந்தித்த பிறகும், தோல்வி குறித்து  காங்கிரஸ் கவலைப்படவில்லை. மிகப்பழமையான காங்கிரஸ் கட்சி நாட்டின்  பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இல்லை.

1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. கண்மூடித்தனமாக விமர்சனங்களை முன் வைக்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை என ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி மக்களவையில் பேசியுள்ளார்.


Advertisement