இந்தியா Covid-19

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு? நாளை காலை 10 மணிக்கு முக்கிய தகவல்களுடன் பிரதமர் உரை.!

Summary:

Modi speak tomorrow 10 am about lock down

பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஊரடங்கை நீடிக்குமாறு பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் நாளை காலை 10 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement