பிரதமர் மோடி புதிய சாதனை.! வாஜ்பாயின் சாதனை முறியடிப்பு!

பிரதமர் மோடி புதிய சாதனை.! வாஜ்பாயின் சாதனை முறியடிப்பு!


modi new record

இந்தியாவின் 14-வது பிரதமராக நரேந்திர மோடி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வெற்றி பெற்று, கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்றார். பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மோடி இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றார். இந்திய வரலாற்றில், காங்கிரஸ் அல்லாத பிரதமர்களில் நீண்டகாலம் காலம் பிரதமராக இருந்தவர்களில் முதலிடத்தை பிரதமர் நரேந்திர மோடி பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் மட்டுமே காங்கிரஸ் அல்லாத நீண்டகால பிரதமராக இருந்தவர். வாஜ்பாய் 2,272 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார், அவரின் சாதனையை பிரதமர் மோடி நேற்று முறியடித்துள்ளார்.

modi

மேலும், இந்தியாவின் நீண்டாக காலம் பிரதமராக இருந்தவர்களில் 4-வது இடத்தையும் பிரதமர் மோடி பிடித்துள்ளார். ஜவஹர்லால் நேரு அவர்கள் 6,130 நாட்களுடன் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்களில் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில இந்திரா காந்தி அவர்களும் (5,829நாட்கள்), மூன்றாவது இடத்தில மன்மோகன் சிங் அவர்களும் (3,656) உள்ளனர்.